சுற்றுச்சூழலை வளப்படுத்த மாணவர்களை பயன்படுத்தி விழிப்பூட்டும் நிகழ்ச்சியை முன்னெடுக்க ஆலோசனை - நிந்தவூர் பிரதேச சபை - News View

About Us

About Us

Breaking

Friday, February 21, 2020

சுற்றுச்சூழலை வளப்படுத்த மாணவர்களை பயன்படுத்தி விழிப்பூட்டும் நிகழ்ச்சியை முன்னெடுக்க ஆலோசனை - நிந்தவூர் பிரதேச சபை

பாறுக் ஷிஹான்

சுற்றுச்சூழலை வளப்படுத்த மாணவர்களை பயன்படுத்தி விழிப்பூட்டும் நிகழ்ச்சியை முன்னெடுக்க ஆலோசனை எடுக்கப்பட்டுள்ளதாக நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் தெரிவித்தார்.

நிந்தவூர் பிரதேச சபையின் மாதாந்த சபை கூட்டமும் 2020ஆம் ஆண்டின் பிரதேச சபையின் 23 ஆவது சபை அமர்வு வியாழக்கிழமை (20) நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிர் தலைமையில் சபை கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது மத அனுஸ்டானம் இடம்பெற்ற பின்னர் 2020 ஜனவரி மாதத்திற்கான கூட்டறிக்கை உறுதிப்படுத்தல்இ 2020 ஜனவரி மாதத்திற்கான கணக்கறிக்கை உறுதிப்படுத்தல் இதவிசாளர் எம்.ஏ.எம். தாஹிரின் உரை இடம்பெற்றன.

தொடர்ந்து சுற்றுச்சூழலை வளப்படுத்த மாணவர்களை பயன்படுத்தி விழிப்பூட்டும் நிகழ்ச்சி திட்டங்களை முன்னெடுப்பது தொடர்பாக சபையில் சகல உறுப்பினர்களும் தத்தமது கருத்துக்களை முன்வைத்தனர்.

பின்னர் உறுப்பினர் கே.எம். ஜெசிமாவின் முன்மொழிவு பெற்றதுடன் கடிதங்கள், ஆராயப்பட்டு உறுப்பினர்களிடம் கருத்துக்கள் கேட்டறியப்பட்டதோடு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

No comments:

Post a Comment