கரடிகளை வேட்டையாட அமெரிக்க ஜனாதிபதியின் மகனுக்கு அனுமதி! - News View

About Us

About Us

Breaking

Saturday, February 22, 2020

கரடிகளை வேட்டையாட அமெரிக்க ஜனாதிபதியின் மகனுக்கு அனுமதி!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மகனுக்கு கரடிகளை வேட்டையாடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

அதேவேளை பெருங்கடல் நகரத்தின் நோம் அருகே உள்ள அலாஸ்கா காடுகளில் வாழும் கிரிஸ்லி கரடிகளையே இவ்வாறு வேட்டையாடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமெரிக்க மாநில அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

அத்தோடு வடமேற்கு அலாஸ்காவின் சீவர்ட் தீப கற்பத்தில் நியமிக்கப்பட்ட பிராந்தியத்தில் கரடிகளை வேட்டையாடுவதற்கு 27 இடங்கள் ஒதுக்கப்பட்டது. 

இதில் வேட்டைக்காரர்களுக்காக ஒதுக்கப்பட்ட 27 இடங்களில் தனக்கான இடத்திற்கு விண்ணப்பித்த மூன்று பேரில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் மகனும் ஒருவர் என அலாஸ்கா மீன் மற்றும் விளையாட்டுத் துறையின் வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரியான எடி கிராசர் தெரிவித்துள்ளார். 

ஆனால் ஜனாதிபதி ட்ரம்பின் மகன் வென்ற கரடி வேட்டை அனுமதிப் பத்திரம் தொடர்பில் சிறிய போட்டி இருந்தது, எனினும் அதற்கான தீர்வுகளை கண்டறிந்த பிறகே அவருக்கு கரடிகளை வேட்டையாடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது என தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment