சொந்தக் காணியில் வீடமைத்துக் கொடுப்பதே ஜனாதிபதியின் திட்டம் - பிறைந்துறைச்சேனையில் வியாழேந்திரன் எம்.பி - News View

Breaking

Post Top Ad

Saturday, February 29, 2020

சொந்தக் காணியில் வீடமைத்துக் கொடுப்பதே ஜனாதிபதியின் திட்டம் - பிறைந்துறைச்சேனையில் வியாழேந்திரன் எம்.பி

எஸ்.எம்.எம்.முர்ஷித்

வீடுகளில்லாத வறிய மக்களுக்கு சொந்தக் காணியில் வீடமைத்துக் கொடுப்பதே ஜனாதிபதியின் திட்டமென மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பிறைந்துறைச்சேனையில் மிகவும் வறிய நிலையிலுள்ள குடும்பத்திற்கான வீட்டிற்கு அடிக்கல் நடும் நிகழ்வு கடந்த வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் எஸ்.எச்.எம்.முஸம்மில் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் கே.ஜெகநாதன், தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், செயலக உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது, தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் வீடு நிர்மாணிக்கும் பணிகளை ஆரம்பிக்குமுகமாக முதற்கட்ட நிதி வழங்கி வைக்கப்பட்டதுடன், குறித்த பயனாளியின் வீட்டில் தென்னங்கன்றுகளும் நட்டி வைக்கப்பட்டது.

No comments:

Post a Comment

Post Bottom Ad