பாக்கிஸ்தானில் ரயிலுடன் பஸ் மோதி விபத்து : 20 பேர் உயிரிழப்பு! - News View

Breaking

Post Top Ad

Friday, February 28, 2020

பாக்கிஸ்தானில் ரயிலுடன் பஸ் மோதி விபத்து : 20 பேர் உயிரிழப்பு!

பாக்கிஸ்தானில் இடம்பெற்ற ரயில் விபத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

பாக்கிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் ரயிலுடன் பயணிகள் பஸ் மோதிய விபத்திலேயே இவ்வாறு 20 பேர் உயிரிழந்துள்ளதோடு, பலர் படுகாயமடைந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தானின் துறைமுகம நகரமான கராச்சியில் இருந்து 500 கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்துள்ள சுக்கூர் மாவட்டத்தில் காந்த்ரா நகரில் இவ் விபத்து வெள்ளிக்கிழமை (நேற்று) இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்தனர்.

அத்தோடு குறித்த விபத்தில் சிக்கி 20 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் செய்தியாளர்களிடம் உறுபதிடுத்தினார்.

இந்நிலையில் படுகாயமடைந்த சிலரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, அவர்களில் சிலரின் நிலையும் கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான ரயில் விபத்துகள் சமீப காலங்களாக அதிகரித்த வண்ணம் காணப்படுவதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் குறித்த மாவட்டத்தின் ஆணையர் ஷபிக் அகமது தெரிவிக்கையில், இச் சம்பவமானது மிகவும் கவலைக்குரியதாகும், குறித்த சம்பவம் இடம்பெற்ற இடத்தில் எவ்விதமான பாதுகாப்பு வேளிகளும் இல்லை.

ரயில் பாதைகளில் முக்கியமாக உட்கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு தரங்கள் இல்லாததால் பாகிஸ்தானில் ரயில் விபத்துக்கள் அதிகரித்துள்ளன. எனவே இதற்கு உரிய அதிகாரிகள் இதற்கான உரிய தீர்விணை பெற்று தர வேண்டுமேன அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்நிலையில் கடந்த ஆண்டு பாக்கிஸ்தானின் மத்திய நகரமான ரஹீம் யார்க்கான் அருகே சரக்கு ரயில் மற்றும் பயணிகள் ரயில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 23 பேர் உயிரிழந்துள்ளதோடு, 72 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad