‘வட்ஸ்-அப்’ பயன்படுத்துவோர் எண்ணிக்கை 200 கோடியை தொட்டது - News View

Breaking

Post Top Ad

Thursday, February 13, 2020

‘வட்ஸ்-அப்’ பயன்படுத்துவோர் எண்ணிக்கை 200 கோடியை தொட்டது

‘வட்ஸ்-அப்’ பயன்படுத்துவோர் எண்ணிக்கை 2019 ஆம் ஆண்டின் இறுதியில் 200 கோடியை எட்டி புதிய மைல்கல்லை அடைந்துள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சமூக ஊடக தளமான ‘வட்ஸ்-அப்’ நிறுவனத்தை பேஸ்புக் நிறுவனம் 2014 ஆம் ஆண்டு வாங்கியது. இந்த தகவல் அனுப்பும் செயலியை 2016 ஆம் ஆண்டு உலகளவில் 100 கோடி பேர் பயன்படுத்தினர். 

அடுத்த 2 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 150 கோடியாக உயர்ந்தது. 2019 ஆம் ஆண்டின் இறுதியில் இது 200 கோடியை எட்டி புதிய மைல்கல்லை அடைந்துள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்மூலம் சமூக ஊடக தளங்களில் வட்ஸ்-அப் 2 ஆவது இடத்தை பிடித்துள்ளது. அதன் தாய் நிறுவனமான பேஸ்புக் 250 கோடி தீவிர பயன்பாட்டாளர்களுடன் முதலிடத்தில் உள்ளது. 

வாட்ஸ்-அப்பில் அனுப்பப்படும் தகவல்களை பாதுகாப்பதற்காக திறக்க முடியாத ‘டிஜிட்டல் லொக்’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் ஹேக்கர்கள் மற்றும் குற்றவாளிகளிடம் இருந்து நீங்கள் தப்பிக்க முடியும் என்றும் பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது

No comments:

Post a Comment

Post Bottom Ad