கொரோனாவால் சீனாவுக்கு வெளியே 19 உயிரிழப்புகள் - பாதிக்கப்பட்டோர் தொகை 78,773 - உயிரிழந்தவர்களின் மொத்த தொகைய 2,462 - News View

About Us

About Us

Breaking

Saturday, February 22, 2020

கொரோனாவால் சீனாவுக்கு வெளியே 19 உயிரிழப்புகள் - பாதிக்கப்பட்டோர் தொகை 78,773 - உயிரிழந்தவர்களின் மொத்த தொகைய 2,462

கொரோனா தொற்றுக்குள்ளாகி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 78,773 ஆக அதிகரித்துள்ளதுடன் உயிரிழந்தவர்களின் தொகையும் 2,462 ஆக பதிவாகியுள்ளது. 

அத்துடன் கொரோனா தொற்றுக்குள்ளாகி பாதிக்கப்பட்டவர்களில் 23,188 பேர் குணமடைந்து உள்ளதுடன், 11,553 பேர் ஆபத்தான நிலையலும் உள்ளனர். 

சீனாவின் பிரதான நிலப்பரப்புகளில் நேற்று மாத்திரம் கொரோனா தொற்றுக்குள்ளாகி சுமார் 100 பேர் வரை உயிரிழந்துள்ளனர். சீனாவின் தேசிய சுகாதார ஆணையத்தின் (என்.எச்.சி) கருத்துப்படி, சனிக்கிழமையன்று சீனாவில் 97 புதிய உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன, அவற்றில் ஒரு உயிரிழப்பு மாத்திரம் ஹூபேக்கு வெளியே இடம்பெற்றுள்ளது. 

சீனாவில் மாத்திரம் தற்போது 2,242 பேர் உயிரிழந்துள்ளனர். இதேவேளை சீனாவுக்கு வெளியே தற்பாது 19 பேர் உயிரிழந்துள்ளனர். 

ஈரானில் ஐவரும், தென்கொரியாவில் நால்வரும், ஜப்பானில் மூவரும், ஹொங்கொங் மற்றும் இத்தாலி போன்ற நாடுகளில் தாலா இருவரும், தாய்வான், பிலிப்பைன்ஸ் மற்றும் பிரான் போன்ற நாடுகளில் ஒவ்வொருவரும் அடங்கலாக இவ்வாறு 19 உயிரிழப்புகளும் நிகழ்ந்துள்ளது. 

சீனாவின் பிரதான நிலப்பகுதிக்கு வெளியே இதுவரை 1,782 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

சனிக்கிழமையன்று, சீனாவின் பிரதான நிலப்பரப்பில் உறுதிப்படுத்தப்பட்ட நோயாளர்கள் 648 அதிகரித்து மொத்தம் 76,936 ஐ எட்டின. புதிய உறுதிப்படுத்தப்பட்ட 648 நோயர்களில் 630 ஹூபே மாகாணத்தில் உள்ளன. சீனாவின் வுஹானில் தோற்றம் பெற்ற கொரோனா வைரஸானது தற்போது 33 நாடுகளில் பரவியுள்ளது. 

1. சீனா: பாதிப்பு - 76,936, உயிரிழப்பு - 2,442 
2. ஜப்பான்: பாதிப்பு - 135+634 (டயமண்ட் பிரின்சஸ்), உயிரிழப்பு - 03 
3. தென்கொரியா: பாதிப்பு - 556, உயிரிழப்பு - 04 
4. சிங்கப்பூர்: பாதிப்பு - 89 
5. இத்தாலி: பாதிப்பு - 79, உயிரிழப்பு - 02 
6. ஹொங்கொங்: பாதிப்பு - 70, உயிரழப்பு - 02 
7. தாய்லாந்து: பாதிப்பு - 35 
8. அமெரிக்கா: பாதிப்பு - 35 
9. ஈரான்: பாதிப்பு - 29, உயிரிழப்பு - 06 
10. தாய்வன்: பாதிப்பு - 26, உயிரிழப்பு - 01 
11. அவுஸ்திரேலியா: பாதிப்பு - 22 
12. மலேசியா: பாதிப்பு - 22 
13. ஜேர்மன்: பாதிப்பு - 16 
14. வியட்நாம்: பாதிப்பு - 16 
15. டுபாய்: பாதிப்பு - 13 
16. பிரான்ஸ்: பாதிப்பு - 12, உயிரிழப்பு - 01 
17. மாக்கோ: பாதிப்பு - 10 
18. கனடா: பாதிப்பு - 09 
19. பிரிட்டன்: பாதிப்பு - 09 
20. பிலிப்பைன்ஸ்: பாதிப்பு - 03, உயிரிழப்பு - 01 
21. இந்தியா: பாதிப்பு - 03 
22. ரஷ்யா : பாதிப்பு - 02 
23. ஸ்பெய்ன்: பாதிப்பு - 02 
24. பெல்ஜியம்: பாதிப்பு - 01 
25. கம்போடியா: பாதிப்பு - 01 
26. எகிப்த்: பாதிப்பு - 01 
27. பின்லாந்து: பாதிப்பு - 01 
28.இஸ்ரேல்: பாதிப்பு - 01 
29. லெபனான்: பாதிப்பு - 01 
30. நேபாள்: பாதிப்பு - 01 
31. இலங்கை: பாதிப்பு - 01 
32. சுவீடன்: பாதிப்பு - 01 
33. ஈராக்: பாதிப்பு - 01 

No comments:

Post a Comment