நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு ஜே.வி.பி ஆதரவு வழங்கும் - நளிந்த ஜயதிஸ்ஸ எம்.பி. - News View

About Us

About Us

Breaking

Sunday, January 26, 2020

நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு ஜே.வி.பி ஆதரவு வழங்கும் - நளிந்த ஜயதிஸ்ஸ எம்.பி.

நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கான முழுமையான ஆதரவை மக்கள் விடுதலை முன்னணி வழங்குமென நாடாளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையை தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் கூறியுள்ளதாவது, “நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கான 20 ஆவது அரசியலமைப்பு திருத்த நடவடிக்கைகள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது.

மேலும் கடந்த காலத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குவதற்கு மக்கள் அதிகாரத்தை வழங்கியிருந்தனர்.

அத்துடன் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும்,  ஐக்கிய தேசிய கட்சியும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குதவதற்கு நாடாளுமன்றத்தில் வாக்களிக்காத சந்தர்ப்பத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் வாக்குகளால் மாத்திரம் அதனை ஒருபோதும் நிறைவேற்ற முடியாது.

மேலும் இவ்விடயத்தில் மக்களுக்கு உடன்பாடு இல்லை எனின் மக்கள் விடுதலை முன்னணியும் அதற்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எதிர்ப்பு வெளியிடாது.

இதேவேளை நிறைவேற்று அதிகார முறையை நீக்குவதற்கு சில சந்தர்ப்பங்களில் ஆளும் கட்சியினால் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டால் அதற்கு எமது கட்சி ஆதரவு வழங்கும்” என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment