அமெரிக்காவிடம் அனுமதி கோரியுள்ள இலங்கை - News View

About Us

About Us

Breaking

Sunday, January 26, 2020

அமெரிக்காவிடம் அனுமதி கோரியுள்ள இலங்கை

ஈரானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் எரிபொருளுக்குப் பதிலீடாக அங்கு தேயிலையை ஏற்றுமதி செய்வதற்கு அமெரிக்காவிடம் அனுமதி கோரியுள்ளதாக இலங்கை தேயிலை சபை தெரிவித்துள்ளது.

ஈரானுக்கு எதிராக அமெரிக்காவினால் தடை விதிக்கப்பட்டுள்ளதால், அமெரிக்காவிடம் இதற்கான அனுமதி கோரப்பட்டுள்ளது.

நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் எரிபொருளுக்காக 250 மில்லியன் அமெரிக்க டொலர் ஈரானுக்கு வழங்கப்படுகின்றது. இந்நிலையில், இதற்கு பதிலாக அந்நாட்டிற்கு தேயிலை ஏற்றுமதி செய்வதற்கு அமைச்சரவை அண்மையில் அனுமதி வழங்கியது.

இந்த யோசனைத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக அமெரிக்காவின் நிதி அமைச்சிடம் அனுமதி கோரி கடிதமொன்றை அனுப்பியுள்ளதாக இலங்கை தேயிலை சபை குறிப்பிட்டுள்ளது.

அனுமதி பெறப்பட்டதன் பின்னர் இதற்கான உடன்படிக்கை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

No comments:

Post a Comment