வரிச்சலுகை பொதுத் தேர்தலை மையப்படுத்தியதா ? - ஆசுமாரசிங்க கேள்வி - News View

About Us

About Us

Breaking

Monday, December 2, 2019

வரிச்சலுகை பொதுத் தேர்தலை மையப்படுத்தியதா ? - ஆசுமாரசிங்க கேள்வி

(நா.தனுஜா)
அரசாங்கத்தின் வரிச்சலுகையானது எதிர்வரும் பொதுத் தேர்தல் வரை மாத்திரம் நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிட்டிருக்கிறதா என்பதை பகிரங்கப்படுத்த வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் ஆசுமாரசிங்க தெரிவித்தார்.

புதிய அரசாங்கத்தினால் பெறுமதிசேர் வரி குறைக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ள சலுகை உண்மையில் வரவேற்பிற்குரியதாகும். அதனூடாக மக்கள் பயனடைவார்கள் என்று கருதுகின்றோம். ஆனால் இவ்வரிச்சலுகையினால் ஏற்படத்தக்க ஏனைய சவால்களை அரசாங்கம் எவ்வாறு எதிர்கொள்வதற்குத் திட்டமிட்டிருக்கின்றது என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும்.

வெளிநாடுகளிடமிருந்து பெற்ற கடன்களில் பெருமளவான தொகையை அடுத்த வருடமே மீளச்செலுத்த வேண்டியுள்ளது. வரிக்குறைப்பையும் செய்த பின்னர் மீளச்செலுத்த வேண்டிய கடன்தொகையைத் திரட்டுவதற்கு அரசாங்கம் எத்தகைய திட்டங்களைக் கொண்டிருக்கிறது? மீண்டும் வெளிநாடுகளிடம் நிதியுதவிகளைப் பெறவுள்ளதா? அல்லது நாட்டின் தேசிய சொத்துக்களை விற்பனை செய்வதற்குத் திட்டமிட்டுள்ளதா? இல்லாவிட்டால் மிலேனியம் சலென்ஞ் கோப்பரேஷன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப் போகின்றதா? இவை குறித்துத் தெளிவுபடுத்துவது அவசியமாகும் என்றும் அவர் கூறினார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment