தேயிலைத் தொழிற் துறை வீழ்ச்சி - கொழுந்து கூடை வியாபாரம் பாதிப்பு - News View

About Us

About Us

Breaking

Saturday, December 14, 2019

தேயிலைத் தொழிற் துறை வீழ்ச்சி - கொழுந்து கூடை வியாபாரம் பாதிப்பு

தேயிலைத் தொழிற் துறையின் வீழ்ச்சி காரணமாக கொழுந்து கூடை வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் அதன் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த ஆயிரக்கணக்கானவர்களின் பொருளாதாரம் இதனால் வீழ்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பதுளை, நுவரெலியா மாவட்டங்களிலுள்ள ​தொழிலாளர்களுக்காக, பதுளை - ஸ்பிரிங்வெலி பகுதியில் கூடைகள் தயாரிக்கப்பட்டு வந்த நிலையில், கூடை நெய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்தவர்கள் வருமானமின்றி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த தோட்டத்தில் மாத்திரம் சுமார் 100 ற்கு மேற்பட்டவர்கள் தொழில் வாய்ப்பை இழந்துள்ளனர் என்றுத் தெரியவருகிறது.

இதேவேளை, தற்போது பெருந்தோட்டங்களில் மூங்கில் கூடைகளுக்குப் பதிலாக, பிளாஸ்டிக் கூடைகள், யூரியா உரைகளைப் பயன்படுத்துமாறு தோட்ட நிர்வாகங்கள் பணிப்பதாலும், கூடைகளைத் தயாரிப்பவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.

எனவே கொழுந்து கூடை தயாரிப்பவர்களின் பொருளாதார நிலைமை குறித்து, மலையகத் தலைமைகள் கவனம் செலுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்படுகிறது.

No comments:

Post a Comment