ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னர் மனித உரிமைகளும் சிறுபான்மை முஸ்லிம்களும் - கலந்துரையாடலுக்கான திறந்த அழைப்பு - News View

About Us

About Us

Breaking

Monday, August 19, 2019

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னர் மனித உரிமைகளும் சிறுபான்மை முஸ்லிம்களும் - கலந்துரையாடலுக்கான திறந்த அழைப்பு

கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இடம்பெற்ற கொடூரமான பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னரான நிலைமைகள் தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்றினை குரல்கள் இயக்கம் ஏற்பாடு செய்துள்ளது. 

சட்டத்தரணியும் ஊடகவியலாளருமான மாஸ் எல் யூசுப் (Mass L. Usuf) அவர்களின் நெறிப்படுத்தலில், மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் சிரேஷ்ட ஆய்வாளர் சட்டத்தரணி பவாணி பொன்சேக்கா, சர்வதேச மன்னிப்புச் சபையின் தென்னாசிய பிராந்தியத்திற்கான உதவி பணிப்பாளர் சட்டத்தரணி தினுஷிகா திசாநாயக்க மற்றும், சட்டம் மற்றும் சமூக நம்பிக்கை நிறுவனத்தின் (Law and Society Trust) சிரேஷ்ட ஆய்வாளர் சட்டத்தரணி விதுர பிரபாத் முனசிங்க ஆகியோரை வளவாளர்களாகக் கொண்டு இக்கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

குறித்த கலந்துரையாடல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (25.08.2019) காலை 9.00 மணிக்கு கொழும்பு - 07 இல் அமைந்துள்ள லைட் ஹவுஸ் ஒடிட்டோரியம் என் லோன்ஸ் (Light House Auditorium & Lawns) என்ற இடத்தில் இடம்பெறவிருக்கின்றது.

திறந்த அழைப்பாக காணப்படுவதுடன், கலந்துகொள்ள ஆர்வமுள்ளோர் உங்களுடைய வருகையை முன்கூட்டியே 0766484119 எனும் இலக்கத்திற்கு அழைப்பினை மேற்கொண்டு உறுதி செய்து கொள்ள முடியும். 

ஊடகப்பிரிவு
குரல்கள் இயக்கம்

No comments:

Post a Comment