ஜெமிலினுடைய இராஜினாமா கட்சியினை எந்த விதத்திலும் பாதிக்காது - முன்னாள் மேயர் ஷிராஸ் - News View

About Us

About Us

Breaking

Saturday, July 27, 2019

ஜெமிலினுடைய இராஜினாமா கட்சியினை எந்த விதத்திலும் பாதிக்காது - முன்னாள் மேயர் ஷிராஸ்

அகில இலங்கை மக்கள் காங்கிரசினுடைய பிரதி தலைவராக செயற்பட்ட முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜெமீல் கட்சியின் சகல பொறுப்புக்கள் மற்றும் உறுப்புரிமையில் இருந்து இராஜினாமா செய்துள்ளதாக அவர் கட்சியின் தலைவர் ரிசாட் பதுர்தீனுக்கு எழுதிய கடிதத்தினை சமூக வலைத்தளங்களில் பார்க்ககிடைத்து. குறித்த இராஜினாமாவானது அகில இலங்கை மக்கள் காங்கிரசினை எந்த விதத்திலும் பாதிக்கவோ அல்லது தேர்தல்களில் பின்னடைவை ஏற்படுத்த போவதில்லை என முன்னாள் கல்முனை மாநகர சபை மேயரும், அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பிரதி தேசிய அமைப்பாளருமான ஷிராஸ் மீராஷாஹிப் குறித்த விடயம் சமப்ந்தமாக கேட்ட பொழுது மேற்கண்டவாறு தனது கருத்தினை தெரிவித்தார்.

மேலும், அகில இலங்கை மக்கள் காங்கிரசானது ஜனாநாயக நீரோட்டத்துக்குள் உருவாக்கப்பட்ட சிறுபான்மை மக்களுக்கான உரிமை குரலாக செயற்படும் கட்சியாகும். அதற்குள் எவரும் வரலாம், போகலாம். அந்த அடிப்படையில் முஸ்லிம் காங்கிரசினை பிரதி நிதிதுவப்படுத்திய ஜெமீல் அவர்களோடு முரண்பட்ட நிலையில் எங்களுடைய கட்சிக்குள் வந்தார். இப்பொழுது அவருடைய விருப்பத்தில் இராஜினாமா கடிதத்தினை தலைமைக்கு அனுப்பியுள்ளதாக அறிகின்றோம். அவர் எங்களுடைய கட்சியை விட்டு விழகி இருப்பதானது அவருடைய ஜனநாயக உரிமையாகவே நாங்கள் பார்க்கின்றோம்.

அத்தோடு ஜெமீல் என்ற ஒரு தனி நபர் எங்களுடைய கட்சியினை விட்டு வெளியேறி இருப்பதினால் எங்களுடைய தலைமைக்கோ அல்லது கட்சிக்கோ எந்த விதத்திலும் அது பாதிப்பினை ஏற்படுத்த போவதில்லை. அம்பாறை மாவட்டத்திலும், நான் பிரதி நிதித்துவப்படுதும் சாய்ந்த மருதிலும் எங்களுக்கு இருக்கின்ற ஆதரவும் மக்கள் அலையும் கூடிச்செல்கின்றதே தவிர ஒரு பொழுதும் அல்லாஹ்வின் நாட்டத்தால் அது குறைய போவதில்லை. அதனை இன்ஷா அல்லாஹ் எதிரே வருகின்ற பொதுத்தேர்தலிலோ.? அல்லது ஏனைய தேர்தல்களிலோ.? மக்கள் நிச்சயமாக பார்க்க போகின்றார்கள்.

இந்தா நாட்டு சிறுபான்மை மக்கள் என்றும் இல்லாதவாறு தலைமையின் மீதும் கட்சியின் மீதும் மிவும் உணர்சிபூர்வமான வகையில் தங்களது ஆதரவினை வழங்கி வருகின்றமை நாளுக்கு நாள் அதிகரிப்பதானது மாற்றுக்கட்சிகளுக்கு ஜீரணித்துக்கொள்ள முடியாத விடயமாக கூட இருக்கலாம். இவை அரசியலில் சர்வ சாதரணமாக இடம் பெறும் விடயங்களாகும். எனவே எமது கட்சியினுடைய பிரதி தலைவர் ஜெமீலுடைய இராஜினாமாவை நாங்கள் ஒரு பெரிய விடயமாக பொருட்படுத்தவில்லை என மேலும் அது சம்பந்தமான கேள்வியினை தொடுத்த பொழுதே மேற்கண்டவாறு தெரிவித்தார் முன்னாள் மேயர் ஷிராஸ் மீராஷாஹிப்.

Kuttiyan ahmed irshad

No comments:

Post a Comment